இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!
இலங்கையின் தலைநகரான கொழும்பில் மக்கள் அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும் என புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், படகு உரிமம், மீனவர் உரிமம் இல்லாமல் கடலுக்கு செல்லக் கூடாது என தெரிவித்துள்ளனர்.