இறுதிகட்ட தேர்தல் : பரபரப்பான வாக்குபதிவுடன் குஜராத் தேர்தல் களம்
22 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜகவின் ஆட்சியில் செயல்பட்டு வரும் குஜராத் மாநிலத்தில் தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதில் முதல் கட்ட தேர்தல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியன்று நடைபெற்றது.
இந்நிலையில் அடுத்து இறுதிகட்ட தேர்தல் இன்று (டிசம்பர் 14) நடைபெற்று வருகிறது. குஜராத்தில் இன்று மொத்தம் உள்ள 182 தொகுதியில் மீதம் உள்ள 93 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. இரண்டாம் கட்ட தேர்தல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் அவரது தொகுதியான, காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மேலும் முதல் மந்திரி ஆனந்திபென் படேல், அகமதாபாத்தில் உள்ள கட்லோடியாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.