அசாம் மாநிலம் ஜோர் காட் மாவட்டத்தில் எடபா ராபர் சாரியலி பகுதியை சேர்ந்தவர் திலீப் டே (50). மிகவும் ஏழையான அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவருக்கு உடல் ஊனமுற்ற உறவினர் ஒருவர் மட்டுமே இருக்கிறார்.
எனவே இறுதிச்சடங்குக்காக சுடுகாட்டுக்கு தூக்கி செல்ல என்ன செய்வது என்று அவர் தவித்துக் கொண்டிருந்தார். இந்த தகவல் அண்டை வீட்டுக்காரரான ரூபம் கோகய் என்ற வர்த்தகருக்கு தெரியவந்தது.
அவர் ஜோர்காட் தொகுதி எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மி (40) என்பவரிடம் தெரிவித்தார். உடனே அங்கு எம்.எல்.ஏ. குர்மி வந்துவிட்டார். உடல் ஊனமுற்ற உறவினருடன் சேர்ந்து இறந்த திலீப்டேவுக்கு இறுதி சடங்கு மேற்கொண்டார்.
பின்னர் அவரது உடலை மூங்கில் பாடையில் கிடத்தி சுடுகாட்டுக்கு சுமந்து சென்றார். இறுதி வரை இருந்து திலீப்டேவின் இறுதி சடங்கை எந்த குறையும் இன்றி முடித்து வைத்தார். அதே நேரத்தில் அப்பகுதி ஆட்டோ ரிக்ஷா டிரைவரின் தாயார் இறந்துவிட்டார். அவரது இறுதி சடங்கிலும் இவர் கலந்துகொண்டார்.
காசிரங்கா தேசிய பூங்கா பகுதியில் பேரழிவு ஏற்பட்டது. அப்போது அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட குர்மி தனது முதுகில் 50 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையை சுமந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். ஆதரவற்றவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார்
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவருக்கும் என்ன பிரச்சினை என ஒன்னும் தெரியாமல் திடீரென அறிக்கை…