வாஜ்பாய் இறந்துவிட்டாரா ..! வாட்ஸ்ஆப்பில் பரவும் செய்திகள்..!
அடல் பிஹாரி வாஜ்பாயியின் மரணத்தைப் பற்றிய செய்தி தொடர்ந்து வைரலாகி வருகிறது. Whatsappல் இந்த போலி செய்தி ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இதுபோன்று, இந்தியாவின் வரலாற்றில் மிக அன்பான அரசியல்வாதிகளில் ஒருவர் இறந்ததைப் பற்றி சமூக ஊடகங்களில் ஒரு வைரல் செய்தி வெளிவந்துகொண்டுதான் இருக்கிறது.
அரசியலையும் தாண்டி இந்திய மக்கள் பலரால் அவர் நேசிக்கப்பட்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக, மக்கள் அவரது மரணத்தைப் பற்றி போலியான செய்திகளை வெளியிடுகிறார்கள். அவரது தற்போதைய நிலை பற்றிய முழு இரகசியமும் இந்த நிகழ்வுக்கு பொறுப்பாகும்.
சுகாதாரம் என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். மேலும், இரகசியத்தை வைத்துக் கொள்வதில் தவறான ஒன்றுமில்லை. வாஜ்பாய் போன்ற நபர் வரும்போது, அது இன்னும் முக்கியமானது.
டி.ஆர்.பீ. பசியில் இந்திய ஊடகங்கள் அவரது மரணத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. AIIMS க்கு இது ஒரு சோதனை, முன்னாள் பிரதம மந்திரி மிகவும் முக்கியமானவர் எனவும், அவரது செய்தி மிகவும் முக்கியத்துவம் ஆனது என்றும் அவர்களுக்கு தெரியும்.
இந்த நேரத்தில், நம் பிரியமான முன்னாள் பிரதமர் உடல்நிலை விரைவில் குணமடைய நாம் பிராத்திக்கலாம்.