தீபாவளிக்கு இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன் என பா.ஜ.க. எம்.பி தெரிவித்துள்ளார்.
தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–
நான் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன். இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன். இந்து பாரம்பரியங்களில் பிறரின் தலையீட்டை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறை செல்வதாக இருந்தாலும், அதற்காக சந்தோஷப்படுவேன். இந்து விழாக்களை எப்போது கொண்டாட வேண்டும் என்பதற்கு ஏற்கனவே இந்து நாட்காட்டி உள்ளது. விழாக்களை நடத்த கால நேரம் நிர்ணயம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, இந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை.இவ்வாறு சிந்தாமணி மாளவியா கூறி உள்ளார்.
DINASUVADU
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…