இரவில் மீண்டும் அத்து மீறிய பாகிஸ்தான்! பதிலடி கொடுத்த இந்தியா..!
காஷ்மீரில்ரம்ஜான்மாதத்தில்ராணுவநடவடிக்கைகளைநிறுத்திவைக்கமத்தியஉள்துறைஅமைச்சகம்முடிவுசெய்தது. இதனை தொடர்ந்து இதுபற்றிய உத்தரவுபாதுகாப்புபடைகளுக்குஅனுப்பப்பட்டது.
எனினும் எல்லை பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் தொடர்ந்து நடந்து வந்தது. நேற்றும் இந்த தாக்குதல் தொடர்ந்தது. இதற்கு இந்திய படையினர் துப்பாக்கி சூடு நடத்தி பாகிஸ்தான் படை வீரர்களுக்கு பதிலடி கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பலியானார்.
தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினரின் தரப்பில் 19 விநாடிகள் ஓடும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் பாகிஸ்தான் முகாம் ஒன்று தாக்கி அழிக்கப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் கூறும்பொழுது, ஜம்மு எல்லை பாதுகாப்பு படையினரை பாகிஸ்தான் படையினர் தொடர்பு கொண்டு சண்டையை நிறுத்துங்கள் என கேட்டு கொண்டனர் என கூறியுள்ளார்.
சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் படையினரின் முன்னிறிவிக்கப்படாத தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடுக்கு சரியான பதிலடியை எல்லை பாதுகாப்பு படையினர் கொடுத்தனர். இதில் பாகிஸ்தான் படை வீரர் ஒருவர் பலியானார். இதனால் போர்நிறுத்தத்தினை அவர்கள் கோரும் நிலை ஏற்பட்டது என கூறினார்.
இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் மீண்டும் முன்னறிவிக்கப்படாத துப்பாக்கி சூடு தாக்குதலை நேற்றிரவு 10.30 மணியளவில் நடத்தியுள்ளனர்.
சிறிய ரக ஆயுதங்களை கொண்டு ராம்கார் பிரிவில் நாராயணபூர் பகுதியில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்பு படையினரின் முகாம்கள் மற்றும் கிராமங்கள் இலக்கிற்கு உள்ளாகின.
இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை கட்டுப்படுத்த பதில் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது. இதில் சேதவிவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தகவல் தெரிவிக்கின்றது