இரண்டு தொகுதிகளில் ஒரு வேட்பாளர் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்…!
தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. 2004ம் ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
முக்கிய தலைவர்கள் பலர் இரு தொகுதிகளில் போட்டியிட்டு பின்னர் ராஜினாமா செய்தது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட்டால் ஒரு தொகுதியில் வேட்பாளர் ராஜினாமா செய்வதால் மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தால் தேர்தல் செலவை வேட்பாளரே ஏற்க செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.