இரண்டு சிறுவர்கள்…11மற்றும்12 வயது….5 மற்றும் 6ஆம் வகுப்பு…பதிவாகியது எப்.ஐ.ஆர்…உத்தர பிரதேச காவல்துறை அட்டுழியம்….!!
உத்தர பிரதேசத்தில் பசு வதை வழக்கில் 11 மற்றும் 12 வயது சிறுவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டம் மஹவ் கிராமத்தின் வயக்காட்டில் பசு மற்றும் கன்றுகுட்டிகளின் இறந்த நிலையில் கிடந்ததை அறிந்து பசுவை கொன்றவர்களை கைது செய்யக்கோரி பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்தவர்கள் புலந்த்சாகரில் உள்ள நெடுஞ்சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் , பசு வதை செய்யப்பட்டதற்கான எப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டது.அதில் 7 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. அந்த ஏழு பேரில் இரு சிறுவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. 11 மற்றும் 12 வயதுடைய அந்த சிறுவர்கள் பள்ளி 5ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்பு படிக்கின்றனர்.இதுபற்றி மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
DINASUVADU.COM