இயற்கை பேரழிவுகளால் பாதிப்பில் கேரளா முதலிடம்…சர்வதேச வானிலை அமைப்பு தகவல்…!!

Default Image

உலகளவில் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச வானிலை அமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வெப்பமயமாதல் காரணமாக தொடர்ந்து 4வதுஆண்டாக கேரளாவில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. 1920ம் ஆண்டுக்கு பிறகு வெள்ளத்தினால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சர்வதேச வானிலை அமைப்பு, சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளில் 4வது இடத்திலும், இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட பகுதிகளின் அடிப்படையில் முதல் இடத்திலும் கேரளா உள்ளதாக கூறியுள்ளது.கடந்த 20 ஆண்டுகளில், 2015, 2016, 2017 மற்றும் 2018 ம் ஆண்டில் தான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக சர்வதேச வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்