இமாச்சலில் கடும் பனிப்பொழிவு…மூடப்பட்ட ரோக்டாங் சாலை இன்று திறப்பு…!!
இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டிருந்த ரோக்டாங் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பிற்குப் பிறகு, மீண்டும் திறக்கப்பட்டது.
இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் பொழிந்துவரும் கடும் பனியால், சாலைகளில் பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளன.
இதனால் சாலைப் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. பனிப்பொழிவால், குலு பள்ளத்தாக்கையும், ஸ்பிடி பள்ளத்தாக்கையும் இணைக்கும் ரோக்டாங் தேசிய நெடுஞ்சாலை கடந்த சில நாட்களாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பனிக்கட்டிகளை அகற்றி சீரமைக்கப்பட்டதற்குப் பிறகு, மீண்டும் அந்த சாலை திறக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com