ஆந்திர காவல்துறையினர் பெண்களை கொலை செய்து உடல் முழுவதும் கடித்து காயப்படுத்தும் தமிழகத்தை சேர்ந்த வெறிபிடித்த கொடூர கொலையாளியை கைது செய்துள்ளனர். கோபத்தை கொலையால் வெளிப்படுத்தும் கொடூர கொலையாளியின் பின்னணி
தமிழகம் மற்றும் ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள சித்தூர் மாவட்டம் நகரி அடுத்த வி.கே.ஆர்.புரம் கிராமத்தில் தனியாக வசித்து வந்தவர் ரத்தினம்மாள். இவர் கடந்த மாதம் 25ம் தேதி இரவு அவரது வீட்டில் தலையில் கல்லால் அடித்து தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
கொலை செய்யப்பட்ட ரத்தினம்மாளின் உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் மர்ம நபர் ஒருவர் பல்லால் கடித்து வைத்திருந்த காயங்கள் காணப்பட்டன. கொலை செய்யப்பட்ட பின்னர் கொலையாளி ரத்தினம்மாளை பல்லால் கடித்து காயப்படுத்தி கொடூரமாக நடந்திருப்பது கண்டு ஆந்திர காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.
இந்தநிலையில் கடந்த 9ம் தேதி சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் அருகே அப்பல்ராஜா கண்டிகை கிராமத்தில் தனியாக இருந்த வெள்ளையம்மாள் என்ற பெண்ணும் கொலைசெய்யப்பட்டு சடலமாக கிடந்தார். அவரது உடலிலும் பல இடங்களில் பல்லால் கடித்து கொடூரமாக காயப்படுத்தி இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இந்த இரண்டு கொலை வழக்குகளும் ஒரே மாதிரியாக நடந்திருப்பதால் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இதில் இரண்டாவது கொலையில் பதிவான சந்தேகத்துக்கிடமான கைரேகை வேலூரை சேர்ந்த சீரியல் கொலையாளியான வாலாஜாபாத் அடுத்த மாதாங்கல் கிராமத்தை சேர்ந்த முனுசாமியின் கைரேகையுடன் ஒத்துப்போனது. தமிழக குற்றபுலனாய்வுதுறையின் உதவியுடன் முனுசாமி குறித்த தகவல்களை திரட்டி தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
குறிப்பாக ஊருக்கு வெளியே தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்து கொலை செய்வதே இவனது வழக்கம் என்றும் கூறப்படுகின்றது இதுவரை 7 கொலை,நான்கு கொலை முயற்சிகள், 30 க்கும் மேற்பட்ட வழிப்பறிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த முனுசாமியை, வாலாஜாபாத்தில் வைத்து, சித்தூர் போலீசார் கைது செய்தனர்.
திருமணம் செய்து கொள்ளாத முனுசாமி தனது 18 வயது முதல் திருட்டு வழிப்பறி வழக்குகளில் ஈடுப்பட்டு போலீசில் சிக்கி சிறைக்கு செல்வதையும், வெளியே வந்தவுடன் மீண்டும் அதே தவறை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
2001 ஆண்டு ஒரு கொலை, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்ட முனுசாமி, வெளியே வந்து தொடர் கொலைகள் செய்து சீரியல் கொலையாளியாக மாறியதாக சுட்டிக்காட்டுகிறது காவல்துறை. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சகுந்தலா,லட்சுமி,தெய்வானை,சாஸ்தம்மா மற்றும் வாலாஜாபேட்டை அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் தன்கையில் வைத்திருந்த செல்போனை கொடுக்க மறுத்த ஒன்னரை வயது பெண் குழந்தையை கொலை செய்து கிணற்றுக்குள் வீசி உள்ளான் இந்த கொடூரன்..! கொலை செய்யப்பட்ட அனைவரையும் உடலில் பல இடங்களில் கடித்து காயப்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளதாக எஸ்.பி ராஜசேகரபாபு தெரிவித்தார்
இவன் பெரிய அளவில் நகை மற்றும் பணத்துக்காக கொள்ளையடிப்பது இல்லை என்றும் பசிக்காக சாப்பாடு கேட்டு இல்லை என்று சொல்லும் பெண்களை மட்டுமே குறி வைத்து இரவு நேரத்தில் கொலை செய்து வந்துள்ளான். கொலையானவர்களின் சடலங்களை ஆசை தீர கடித்து வைக்கும் வெறிப்பிடித்த குணம் கொண்டவன் என்றும் கூறப்படுகின்றது. அப்போதைய செலவுக்கு தேவையான சிறிய அளவு பணத்துக்காகவே இத்தனை கொலைகளையும் முனுசாமி செய்ததாக குற்றஞ்சாட்டுகிறார் எஸ்.பி ராஜசேகரபாபு
முனுசாமியால் எல்லையோரத்தில் உள்ள கிராம மக்கள் கடந்த சில வாரங்களாக பயத்தில் இருந்து வந்ததாகவும். அவனை மீண்டும் வெளியே விட்டால் மேலும் பல கொலைகளை செய்திருக்க கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் பாதுகாப்புடன் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் அதே நேரத்தில் 1 1/2 வயது பெண் குழந்தை முதல் 65 வயது மூதாட்டி வரை 7 பெண்களை கொலை செய்து கடித்து காயப்படுத்திய கொடூர மனம் படைத்த கொலையாளி முனுசாமி மீது ஆந்திர காவல்துறையினருடன் இணைந்து தமிழக காவல்துறையினரும் சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…