இப்தார் விருந்து குறித்து சர்ச்சை : பாஜக எம் எல் ஏ மீது வழக்கு..!

Default Image
தெலுங்கானாவில் கோசமஹால் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. டி. ராஜா சிங் லோத். இவர், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரமலான் மாதத்தில் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இப்தார் விருந்து நடத்துவதுபோல் நீங்களும் நடத்திடலாமே என நண்பர் ஒருவர் சிங்கிடம் கூறுகிறார்.
அதற்கு, தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் இப்தார் விருந்து நடத்துவதில் பரபரப்புடன் உள்ளனர். தொப்பிகளை அணிகின்றனர்.  செல்பி எடுத்து கொள்கின்றனர்.
ஓட்டு வாங்கி அரசியல் நடத்துவோரின் எண்ணமிது. இப்தார் விருந்தில் கலந்து கொள்வோருடன் அமருபவர்கள் எல்லாம் ஓட்டுக்காக பிச்சை எடுப்பவர்கள். எனது எண்ணம் வேறு என சிங் கூறியுள்ளார். இந்நிலையில் எம் எல் ஏ-வின் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனிடையே மத உணர்வை புண்படுத்தும் விதமாக ராஜா சிங் பேசியதாக பாலாக்னுமா காவல் நிலைய போலீசார் இந்திய குற்றவியல் சட்டத்தின் 153 ஏ பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்