தெலுங்கானாவில் கோசமஹால் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. டி. ராஜா சிங் லோத். சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிடுபவரான இவர், சமூக வலைதளமொன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ரமலான் மாதத்தில் மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இப்தார் விருந்து நடத்துவதுபோல் நீங்களும் நடத்திடலாமே என நண்பர் ஒருவர் சிங்கிடம் கூறுகிறார்.
அதற்கு, தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் இப்தார் விருந்து நடத்துவதில் பரபரப்புடன் உள்ளனர். தொப்பிகளை அணிகின்றனர். செல்பி எடுத்து கொள்கின்றனர்.
ஓட்டு வாங்கி அரசியல் நடத்துவோரின் எண்ணமிது. இப்தார் விருந்தில் கலந்து கொள்வோருடன் அமருபவர்கள் எல்லாம் ஓட்டுக்காக பிச்சை எடுப்பவர்கள். எனது எண்ணம் வேறு என சிங் கூறியுள்ளார்.
இந்துத்துவம் ஒவ்வொருவரையும் மதிக்க கற்று கொடுக்கிறது. ஆனால் சில மதங்கள் மற்றும் அவர்களின் மத புத்தகங்கள் இந்துக்களை கொல்ல வேண்டும் என போதிக்கிறது. ஏனெனில் அவர்கள் காபிர் என கூறுகிறது. இந்துக்களை கொல்ல வேண்டும் என பேசுபவர்களின் இப்தார் விருந்தில் எப்படி நான் கலந்து கொள்வது? அல்லது அவர்களுக்காக நான் எப்படி இப்தார் விருந்து நடத்துவது? என்றும் அவர் கேட்டுள்ளார்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…