இன்று முதல் புதுச்சேரியில் கடும் கட்டுப்பாடு – முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கடும் கட்டுப்பாடு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கடும் கட்டுப்பாடு விதிப்பது குறித்து இன்று அறிவிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், அரசு விதிக்கும் கட்டுபடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும், உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தவுடன் இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.