இனி 1 மணி நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் இலவச தரிசனம் : டைம் ஸ்லாட் முறை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் வருகை தினமும் அதிகமாகத்தான் இருக்கும். கோயிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் எப்போதும் சுமார் 4 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை குடோன்களில் தங்கவைக்க படுகின்றனர். அதனை தடுக்க தற்போது டைம் ஸ்லாட் தரிசன அட்டை முறையை பயன்படுத்தலாம் என திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
இதன்படி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு தரிசன நேரம், தேதி குறிப்பிட்டு டைம் ஸ்லாட் அட்டை கொடுக்கப்படும் அதன்படி 1 மணி நேரத்தில் இலவச தரிசனம் செய்ய இயலும். இதனை குறித்து, ஆலோசனை கூட்டம் திருமலை, சேஷாபவனத்தில் நடந்தது.
தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த டைம் ஸ்லாட் அட்டை மூலம் பக்தர்கள் அதிக நேரம் காத்திராமல் உடனடியாக சாமி தரிசனம் செய்ய இயலும் இன்று முதல் ஸ்லாட் முறை சோதனைக்காக நடத்தபடுகிறது என்று கூறியுள்ளார். இந்த டைம் ஸ்லாட் அட்டையை பெற அதார் கார்ட் கட்டாயம். வேறு எந்த ஆதாரமும் ஏற்று கொள்ளபட மாட்டாது. என கூறினார்.
இந்த திட்டத்தை மேம்படுத்தி பிப்ரவரி, மார்ச் மாதத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த டைம் ஸ்லாட் அட்டையை பெற அலிபிரி அருகே காளிகோபுரத்தில் 12 கவுண்டர்கள், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 4 கவுண்டர்கள் உள்பட மொத்தம் 14 இடங்களில் 117 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கபடுகின்றன. இங்கு காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3 மணி முதல் 10 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் டைம் ஸ்லாட் அட்டை தரப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனை இன்று தேவஸ்தான தலைமை அதிகாரி தொடங்கி வைத்தார்.