இனி வாக்கு பதிவு மையங்களில் சி.சி.டி.வி. கேமிரா…!!
தெலுங்கானா, சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் இந்த வருடத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஓம் பிரகாஷ் ராவத் டெல்லியில் இருந்து வீடியோ கான்பரென்ஸ் வழியே இன்று பேசும்பொழுது, தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களின் வாக்கு பதிவு நடைமுறைகள் முழுவதும் சி.சி.டி.வி. கேமிராக்களை கொண்டு கண்காணிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.இதன்படி, தெலுங்கானாவில் வருகிற டிசம்பர் 7ந்தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அனைத்து 32,574 வாக்கு பதிவு மையங்களிலும் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன.
எந்த தவறும் நடைபெறாமல் தேர்தல் மிக சுமுக முறையில் மற்றும் வெளிப்படை தன்மையுடன் நடைபெற வேண்டும் என்பதனை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
dinasuvadu.com