திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் செல்வார்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை காண ஆர்வம் கொள்வார்கள் இந்நிலையில் வேங்கடேசப் பெருமாளுக்கு அன்றாட நடைபெறும் நிகழ்ச்சிகளைத் பக்தர்களுக்கு வேங்கடேஸ்வரா என்கிற பக்தி சேனல் (எஸ்.வி.பி.சி)என்று ஒளிபரப்பி வருகிறது. இந்த சேனலில் சுப்ரபாதம், கல்யாணோத்ஸவம், சகஸ்ரதீப அலங்கார சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி செல்ல வேண்டும் அங்கு திருப்பதியானை தரிசிக்க வேண்டும் அவருக்கு நடைபெறும் சேவைகளை தரிசிக்க வேண்டும் என்று எண்ணும் பக்தர்கள் ஏராளம் அவ்வாறு வாய்ப்பு கிடைப்பவர்கள் மட்டுமே இதனை தரிசிக்க முடியும் சாதாரண மக்களால் இதனை காண்பது சற்று சிரமாக இருந்து வருகிறது.இந்நிலையில் தான் திருப்பதிக்குச் செல்ல முடியாத பக்தர்கள் அங்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையுமே அவர்கள் வீட்டிலேயே இருந்தபடி டிவி-யில் கண்டுகளித்து வருகின்றனர்.
மேலும் திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவம், ரதசப்தமி மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களையும் நேரடியாக ஒளிபரப்பி வருகின்றது.இது மட்டுமல்லாமல் திருமலையில் ஒவ்வோரு நாளும் அறைகள் காலியாக இருக்கும் நிலவரம் மற்றும் சேவைகள் பதிவு செய்வதற்கு உரிய விவரங்கள் மேலும் அங்கு பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட பயனுள்ள தகவல்களை தினந்தோறும் அந்த சேனல் வழங்கி வருகிறார்கள்.
தற்போது இந்த சேனலின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ‘யூ டியூப்’பிலும் நேரலையாக ஒளிபரப்பப் படுகிறது.இந்த நடைமுறை மூலம் இனி பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தும் அல்லது ரயில மற்றும் பஸ் போன்றவற்றில் பயணித்துக்கொண்டிருந்தாலும் திருப்பதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை தங்களின் மொபைல் போனிலேயே பார்த்து மகிழலாம்.இது குறித்த தொழில்நுட்ப வசதிகளை தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…