இனி திருப்பதியில் 24 மணிநேரத்தில் இலவச தரிசனம்..!!தேவஸ்தானம்..!!
திருப்பதியில் 24 மணிநேரத்தில் இலவச தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறையையொட்டி அங்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் சிரமம் அடைவதை தவிர்க்கும் வகையில், நேர ஒதுக்கீட்டின் படி டிக்கெட் வழங்கப்பட்டு அதே நாளில் தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது.
சனி, ஞாயிற்று கிழமைகளில் 30 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆதார் அல்லது வாக்காளர் அட்டையை காண்பித்து இலவச தரிசன டிக்கெட்டை பெறலாம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.