இனி தாஜ்மஹாலை சுற்றி பார்க்கவும் கட்டுப்பாடு
உலக அதிசியங்களில் ஒன்றாகவும், உலக காதலர்களின் சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹாலை காண தினந்தோறும் உலகெங்கிலிருந்தும் பல லட்சகணக்கில் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.
அதனால் அங்கு கட்டுபடுத்தமுடியாத அளவுக்கு கூட்டம் இருக்கிறது மேலும் இங்கு சுற்று சூழல் மாசுபாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு இன்று (ஜனவரி 20) முதல் ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், இந்த முடிவு தொல்லியல் துறை பரிந்துரையின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com