இனி சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பினால் தண்டனை நிச்சயம்!மத்திய அரசு
மத்திய அரசு சமூக வலைதளங்களில் வெளியாகும் வதந்திகள், விஷமச் செய்திகளை அழிக்கவும் அதைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் இன்று ஆலோசனை நடத்துகிறது.காஷ்மீரில் தீவிரவாதம், கல்வீச்சு சம்பவங்களுக்கு இத்தகைய விஷமச் செய்திகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அண்மைக்காலத்தில் குழந்தைக் கடத்தல் வதந்திகள் பரப்பப்பட்டு வெறிபிடித்த கும்பல்களால் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளை அழிப்பது குறித்து மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையிலான உயர்நிலைக் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.
விஷமச் செய்திகளைப் பரப்புவோர் மீது வழக்குப் பதிவு செய்தல், சமூக இணையதள சேவை வழங்கும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து விஷமச் செய்திகளைத் தடுப்பது, அழிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.