இனி கவலை வேண்டாம்!மொபைலில் விண்ணப்பித்தால் வீடு தேடி வரும் பாஸ்போர்ட்!
மொபைல் ஆப் ((Mobile App)) மூலமாகவே, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும்,பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, அதனை எளிதில் பெறும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஸ்போர்ட் சேவா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அலைபேசி செயலியை((Mobile App)) அறிமுகம் செய்தார். பின்னர் பேசிய அவர், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள அசெளகரியங்களை களைந்து எளிதாக்கும் வகையிலேயே, பாஸ்போர்ட் சேவா செயலி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
அந்த செயலியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அனுப்பினாலே போதுமானது என்றும், அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணைக்குப் பின், பாஸ்போர்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். “பாஸ்போர்ட் புரட்சி” என்று அழைக்கும் அளவிற்கு, பாஸ்போர்ட் சேவா செயலி மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.