இதுதொடர்பாக அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது, நொறுக்குத் தீனி உணவு வகைகளை மாணவ, மாணவிகள் சாப்பிடுவதால் அவர்களின் ஆரோக்கியம் கெடுகிறது. மேலும் அவர்கள் உடல் எடையும் அதிகரித்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு பல்வேறு நோய்களும் இது போன்ற உணவு வகைகளால் வருகின்றன. குறிப்பாக இந்த வகை உணவுகளால் அவர்களின் எடை அதிகரித்து பாதிக்கப்படுகின்றனர்.