இனி இந்த மாதிரி செல்ஃபி எடுப்பதற்கு தடை…!மத்திய அரசு அதிரடி ?
மத்திய அரசு சுற்றுலாத் தலங்களில் ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து, அத்தகைய இடங்களில் செல்ஃபி எடுப்பதற்கு தடைவிதிக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த கேள்விக்கு மக்களவையில் எழுத்துமூலமாக பதிலளித்த மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ, செல்பி எடுத்தால் விபத்து ஏற்படக் கூடிய ஆபத்தான பகுதிகளை அடையாளம் காணுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்தகைய இடங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, அவை No Selfi Zone எனப்படும் செல்பி எடுக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் பலர், ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க முயற்சித்து விபத்தில் சிக்கி பலியாவதைத் தடுப்பதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.