இனிய செய்தி ..!பாலியல் குற்றவாளிக்கு இனி டிரைவிங் லைசென்ஸ்,பென்சன், துப்பாக்கி கிடையாது!அதிரடி முடிவு எடுத்த முதலமைச்சர்

Default Image

அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்   பாலியல்  குற்றங்களுக்கு எதிராக புதிய முயற்சி ஒன்றை கையில் எடுக்க உள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பாலியல்  குற்றங்கள் அதிகரித்து வருகின்றது .மத்திய ,மாநில அரசுகள் என்ன முயற்சி செய்தாலும் அதை தடுக்க பெரும் பிரச்சினையாகவே உள்ளது.

பல்வேறு முயற்சிகள் இந்த விஷயத்தில்  தோல்வியில் தான் முடிகின்றது.சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பில் கூட பெண்களுக்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது .இது இந்தியாவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.ஆனால் இதை தடுக்கும் விதமாக அரியானா அரசு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

Image result for haryana cm

இது குறித்து அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறுகையில்,துப்பாக்கி உரிமம்,மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம்,வாகன உரிமம் மற்றும் வயதானவர்களுக்கான ஓய்வூதியம் ஆகியவை ரத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்டு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இவை அனைத்தும் ரத்து  செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில் தற்காலிகமாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இந்த வசதிகள் அனைத்தும்  நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.விசாரணை முடிந்த பின்னர்  குற்றம் நிருபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு எந்த காலத்திலும் இழந்த சலுகைகளை  பெற முடியாது.மேலும் இந்த திட்டமானது ஆகஸ்ட் 15 ஆம் தேதி  அல்லது  ஆகஸ்ட் 26 ஆம் தேதி  துவங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் அல்லாமல் தடையின்றி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.விரைவில் இது குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்க உள்ளேன்  என்று அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்