இந்திராணி முகர்ஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
இந்திராணி முகர்ஜி ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ள நிலையில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட பரிசோதனைகளில் அவர் மன அழுத்தத்துக்கான மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது.
இதனால் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மன அழுத்தத்துக்கான மருந்தான பென்சோடியாஸ்பைன் ((benzodiazepine)) என்ற மருந்தை இந்திராணி முகர்ஜி அதிக அளவில் எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவருக்கு அமிட்ரிப்டிலைன் ((amitriptyline)) என்ற மருந்துதான் பரிந்துரைக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பரிந்துரைக்கப்படாத மருந்தை இந்திராணி முகர்ஜி அதிக அளவில் எடுத்துக்கொண்டது எப்படி என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.