இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதேபோல் மராட்டியத்தின் கடலோர மாவட்டங்களிலும், தெலுங்கானா, ராயலசீமா கடலோர ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
இந்நிலையில் இந்திய வானிலை மையம், நாளை முதல் தென் மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடையும் என்றும், மராட்டியத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடலோர மாவட்டங்களிலும் நாளை முதல் 5 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது.
இதனால் மும்பைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மராட்டியத்தின் ரத்னகிரி மற்றும் சிந்து துர்க் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் அவசர நிலைமைகளை எதிர் கொள்ள தயாராக இருக்குமாறு மாநில பேரிடர் மீட்பு குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மந்த்ராலயா பகுதி கட்டுப்பாட்டு அறைகள், மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி மற்றும் தாசில்தார் அலுவலகங்கள் 24 மணி நேரமும் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மும்பை வாசிகள் அவசர உதவிகளுக்கு 1916 என்ற எண்ணிலும், புறநகரில் வசிப்போர் 1077 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இந்த மாதத்தின் மழைப்பொழிவு அளவு 101 சதவீதமாக இருக்கும். ஆகஸ்டு மாதத்தில் இது 94 சதவீதமாக இருக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை 8.30 மணி தொடங்கி 11-ந்தேதி வரை கேரளா, கடலோர கர்நாடகா, வடக்கு உள் கர்நாடகா, தெற்கு உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், நாளை காலை 8.30 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர கர்நாடகாவில் மிதமிஞ்சிய அளவுக்கு பலத்த மழை பொழிவு இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…