இந்திய வரலாற்றின் கருப்பு நாள் – டிசம்பர் 6…!!

Default Image

இந்திய வரலாற்றின் கருப்பு நாள் – டிசம்பர் 6
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இடம் அயோத்தி. அயோத்தி இராமர் பிறந்த இடமென்றும், அது புனிததன்மை வாய்ந்தாகவும் கருதப்படுகிறது. 1528ஆம் ஆண்டு முகலாயர் படையெடுப்பிற்குப் பின் முகலாய படைத்தலைவர் ‘மிர் பாங்கியினால்’ முகலாயப் பேரரசர் பாபரின் பெயரால் ஒரு மசூதி ஒன்று கட்டப்பட்டது. இந்நிலையில் மிர் பாங்கி அங்கிருந்த இராமர் கோயிலை இடித்த பின்னரே பாபர் மசூதியை கட்டினார் என்று இந்துக்கள் கருதப்பட்டது.
முன்னதாக, பல ஆண்டுளுக்கு முன்பு இவ்விடம் இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மத வழிபாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1949ஆம் ஆண்டு வரை, அயோத்தி அமைதியாக தான் இருந்தது. இதன் பிறகே அயோத்தி யாருக்கான இடம் என சர்ச்சை ஆரம்பித்தது.
1949ஆம் ஆண்டு டிசம்பர் 22ந் தேதி பாபர் மசூதியில் தொழுகை முடிந்த பிறகு யாரோ சிலர் மசூதிக்குள் நுழைந்து, ராமர் சிலையை வைத்தது. சிலை இருக்கும் காரணத்தை கூறி அப்போதைய நீதிபதி கே.கே.நாயர் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 23ந் தேதி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். 33 ஆண்டுளுக்கு பிறகு வேறு ஒரு நீதிபதியால் பூஜைக்காக திறக்கப்பட்டது.1986ஆம் ஆண்டு பிப்ரவரி 1ந் தேதி, பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது.
இடம் யாருக்கு சொந்தம் என அமைதியாக இருந்த அயோத்தி கலவர பூமியாக மாறியது. டிசம்பர் 6 1992ஆம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. நாடு முழுவதும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் சுமார் 2000 மக்கள் கொல்லப்பட்டனர்.
கலவரத்தின் தாக்கம், பல மாதங்களுக்கு இருந்தது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களும் ஒருவரையொருவர் தாக்குவதும் வீடுகளுக்குத் தீ வைப்பதும் கடைகளையும் வழிபாட்டுத் தலங்களையும் சேதப்படுத்துவதுமாக இருந்துவந்தது. நாட்டின் முக்கிய நகரங்களான மும்பை, சூரத், அகமதாபாத், கான்பூர், டெல்லி என பல இடங்களில் ஏற்பட்டு பல உயிரிழப்புக்கு வழிவகுத்தது. 1993ஆம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்புக்கும் இது முதன்மையான காரணமாகவே இருந்தது.இந்தியா மாத சார்ப்பற்ற நாடு என்று கருதுவதில், கேள்வி எழும்பிய நாள் இந்நாள் டிசம்பர் 6.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்