இந்திய ரூபாயின் மதிப்பு ஐசியுவில் இருக்கிறது என்று கிண்டல் செய்த மோடி…!!

Default Image
இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது கோமாவில் படுத்துக்கிடக்கிறது, இப்போது என்ன சொல்லப்போகிறார் பிரதமர் மோடி என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நேற்று ராஷ்ட்ரிய மாஞ்ச் பிளாட்பார்ம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பாஜகஎம்.பி. சத்ருஹன் சின்ஹா, சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஞான்ஷியாம் திவாரி, முன்னாள் குஜராத் முதல்வர் சுரேஷ் சந்திர மேத்தா, பிரவீண்சிங் ஜடஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பேசியதாவது:
நாட்டின் பொருளாதார சூழல் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. தவறான புள்ளிவிவரங்களையே மத்திய அரசு அளித்து வருகிறது. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60ஆகச் சரிந்த போது, இந்திய ரூபாய் ஐசியுவில் இருக்கிறது என்று கிண்டல் செய்தார்.இப்போது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.75 ஆக வீழ்ச்சி அடைந்து, கோமா நிலைக்குச் சென்றுவிட்டது. இப்போது ஏதாவது மோடி வாய்திறந்து பேசலாமே. இப்போது ஏதும் மோடி பேசவில்லை.
நாட்டில் உள்ள சூழல் என்னவென்றால், அரசுக்கு எதிராக மக்கள் எந்தக் கருத்தையும் பேசமுடியவில்லை. அவ்வாறு ஒரு பெண் அல்லது ஆண் பேசினால், அவர் தேசத்துரோகி என்று அடையாளமிடப்படுகிறார். இது அடிப்படை ஜனநாயகத்துக்கு விரோதமானது.நான், பிரசாந்த் பூஷன், அருண் ஷோரி ஆகியோர் சேர்ந்து, ரபேல் போர்விமானக் கொள்முதலில் மிகப்பெரிய ஊழல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நடந்துள்ளது, இது குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரி சிபிஐயிடம் மனு அளித்துள்ளோம். இந்த ஊழலுக்கு ஒரே ஓருவர், பிரதமர் மோடி மட்டுமே பொறுப்பாளி.
ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் விவகாரத்தில் விதிமுறைகளை மீறி யாரும் செயல்பட முடியாது. பிரதமரால் கூட விதிமுறைகளை மீறி முடியாது. ஆனால், இப்போதுள்ள பிரதமர் மோடி அதை மீறியுள்ளார். இந்த மோசமான ஒப்பந்தம் குறித்து சிபிஐ விசாரித்தால், ஏராளமான விஷயங்கள் பூதாகரமாக வெளியேவரும்.
சிபிஐ பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம், அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதித்துறையையோ அல்லது வேறுயாரையும் அணுகுவோம்.நாட்டில் என்னமாதிரியான ஆட்சி நடக்கிறது எனத் தெரியவில்லையே. தொழிலதிபர்கள் வங்கியில் கடன் வாங்குகிறார்கள், மிகப்பெரிய ஊழலைச்செய்துவிட்டு, எளிதாக நாட்டை விட்டுப் பறந்துவிடுகிறார்கள்.
குஜராத்தில் பிறமாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதிசெய்வது அரசின் பொறுப்பாகும். இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.பாஜக எம்.பி. சத்ருஹன் சின்ஹா பேசுகையில், “நான் சார்ந்திருக்கும் கட்சி, அரசுக்கு எதிராகவே பேசுகிறேன் என்று என்னிடம் கேட்கிறார்கள். என்னுடைய பதில் என்னவென்றால், கட்சியைக் காட்டிலும் யாரும் உயர்ந்த மனிதர் இல்லை. நாட்டைக் காட்டிலும் எந்தக் கட்சியும் பெரிதானது இல்லை. இது நாட்டின் நலனுக்காகக் கூறுகிறேன்.
நான் பாஜகவைவிட்டு விலகப்போகிறேன். யாரேனும் என்னை விலக்க விரும்பினால், தாராளமான விலக்கலாம். இப்போது பாஜகவில் எந்தவிதமான ஜனநாயகமும் இல்லை, சர்வாதிகாரம்தான் இருக்கிறது. ஒரு மனிதரின் ஆட்சி, இரு வீரர்கள் கொண்ட ராணுவம்தான் இருக்கிறது. அகங்கார மனநிலை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்