Categories: இந்தியா

இந்திய முழுவதும் இடைத்தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வி!மீள்வது எப்படி?பாஜக ஆலோசனை

Published by
Venu

 பாஜக  பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்திலும் கூட்டணிக் கட்சிகளுடன் உறவை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், நாகாலாந்து உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. இதன் எதிரொலியாகவும், 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வர இருப்பதை முன்னிட்டும் கூட்டணியில் உள்ள கட்சிளுடன் உறவை மேலும் வலுப்படுத்த பாரதிய ஜனதா  முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சி பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இரு கட்சிகளின் இடையே ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக பாலஸ்- காதேகவுன் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில் இரு கட்சிகளும் தங்களுக்குள் மீண்டும் இணக்கமான சூழ்நிலையை உருவாக்க முடிவு செய்துள்ளன. இதன் தொடர்ச்சியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று சந்திக்கிறார். கூட்டணியை புதுப்பிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதலையும் சந்திக்க பாஜக தலைவர் அமித்ஷா சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானையும் அமித்ஷா சந்தித்து பீகார் நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

SA vs IND : இன்று கடைசி டி20 போட்டி..! இந்திய அணியில் மாற்றம் என்ன?

SA vs IND : இன்று கடைசி டி20 போட்டி..! இந்திய அணியில் மாற்றம் என்ன?

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…

59 mins ago

உங்க ஊர் இருக்கா? தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…

2 hours ago

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

11 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

13 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

13 hours ago

தூத்துக்குடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…

13 hours ago