இந்திய முதலமைச்சர்களில் இவருதான் ஃபேஸ்புக்ல டாப்!எப்படி தெரியுமா ?
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு, இந்திய முதலமைச்சர்களில், அதிகம் பேரால் முகநூலில்(FACEBOOK) பின் தொடரப்படுபவர் என்ற சிறப்பு கிடைத்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், டிசம்பர் 31ஆம் தேதி வரை, யோகி ஆதித்யநாத்தின் கருத்துகளை பகிர்ந்தவர்கள், கருத்து தெரிவித்தவர்கள், லைக் செய்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்த புள்ளிவிவரம் தயாரிக்கப்பட்டதாக, பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரை 5 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே, குஜராத்தின் விஜய் ரூபாணி ஆகியோர், முகநூலில் பிரபலமாக உள்ள முதலமைச்சர்கள் என்று, பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.