பிரதமர் நரேந்திர மோடி ,சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் இந்திய நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட முதல் நலவாழ்வு மையத்தைப் திறந்து வைத்தார்.
மத்திய பட்ஜெட்டின் போது இந்திய நலவாழ்வுத் திட்டம் என்னும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் நலவாழ்வு மையங்கள் அமைப்பதும், 10கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒரு குடும்பத்துக்கு 5லட்ச ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்குவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும். நடப்பு நிதியாண்டில் நலவாழ்வு மையங்கள் அமைக்க ஆயிரத்து இருநூறு கோடி ரூபாயும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பத்தாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் அமைக்கப்பட்ட முதல் நலவாழ்வு மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
பழங்குடியினப் பெண்களுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார். அப்போது பெண் ஒருவருக்கு காலணிகளை மோடி வழங்கினார். நிகழ்சசியில் பேசிய அவர், இந்திய நலவாழ்வுத் திட்டம் என்பது சேவைகளை அளிப்பது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பங்களிப்புடன் நலமான, திறமுள்ள, புதிய இந்தியாவை உருவாக்குவதாகும் எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…