இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலி டுவிட்டர்…!!

Default Image
தேர்தல் ஆணையம் பெயரில் இயங்கிய 2 போலி கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக 2 டுவிட்டர் கணக்குகள் இயங்கி வந்தன.  @Election Comm மற்றும் @DalitFederation என்று தனித்தனியான பெயரில் இயங்கி வந்த இந்த கணக்குகளை ஆயிரக்கணக்கானோர் பின்பற்றி வந்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு என்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு எதுவும் இல்லை.  இந்த நிலையில், போலியான கணக்குகள் மக்களை தவறாக வழிநடத்த கூடும் என தேர்தல் ஆணையம் அச்சமடைந்தது.  இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்திடம் தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டது.அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் பெயரில் போலியாக செயல்பட்டு வந்த 2 கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்