இந்திய சாலைகளில் இனி வாகனங்கள் பறக்கலாம் ! அதிகபட்ச வேகம் அதிகரிப்பு !
மணிக்கு 100 கிலோமீட்டரில் இருந்து 120 கிலோமீட்டராகவும், வாடகைக் கார்களுக்கான வேகம் மணிக்கு 80 கிலோமீட்டரில் இருந்து 100 கிலோமீட்டராகவும் விரைவுச் சாலைகளில் கார்கள் செல்வதற்கான அதிகபட்ச வேகம், அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் கார்களுக்கான அதிகபட்ச வேகம் மணிக்கு 100 கிலோமீட்டராகவும், டாக்சி, கேப் போன்ற வாடகைக் கார்களுக்கு 90 கிலோமீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு வேக வரம்பு மணிக்கு 80 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
நகரச்சாலைகளில் கார்கள் மற்றும் டாக்சிகளுக்கு வேக வரம்பு மணிக்கு 70 கிலோமீட்டராகவும், இருசக்கர வாகனங்களுக்கு மணிக்கு 60 கிலோமீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகபட்ச வேக அனுமதி என்பது விரைவுச்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் பொருந்தும் என்றாலும், தேவையான இடங்களிலும் குறைந்த வேக மண்டலங்களிலும் அதற்குரிய வேகத்தையே பின்பற்ற வேண்டும். சிறுநகரங்கள், கிராமங்கள் வழியாக கடக்கும் சாலைகளில் இந்த வேகவரம்பு பொருந்தாது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.