“இந்தியா வளர நாம் காரணம் ” இனி இந்தியாவுக்கு ஆப்பு ..!!

Default Image

இந்தியா, சீனா போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு அளிக்கப்படும் மானியங்கள் உள்ளிட்ட நிதியுதவிகளை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் உள்ள வடக்கு டகோடா மாநிலத்தில் கட்சிக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா தொடர்ந்து இணைந்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், உலக அளவில் சீனாவும், இந்தியாவும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடுகளாக உருவாவதற்கு உலக வர்த்தக அமைப்புதான் காரணம். மற்ற சிறிய நாடுகள் வேண்டுமானால், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் எனலாம், ஆனால், சீனாவும், இந்தியாவும் மானியத்தை வாங்கிக்கொண்டு நாங்களும் வளர்ந்து வரும் நாடுகள் என்று சொல்கின்றன.

Image result for சீனாவும், இந்தியாவும்

சீனாவும், இந்தியாவும் வளர்வதற்கு நாம்தான் பணத்தையும், மானியத்தையும் அளிக்கிறோம். இவர்கள் வளர நாம் ஏன் மானியம் அளிக்க வேண்டும். அப்படி பார்த்தால் நாமும் வளர்ந்து வரும் நாடுதான். இப்போது வரை நாமும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் தான் கொண்டிருக்கிறோம். எனவே அனைத்து மானியத்தையும் விரைவில் நிறுத்திவிட்டு இனி மற்ற நாடுகளைவிட நாம் வேகமாக வளரப்போகிறோம்.
எனக்குத் தெரிந்து உலக வர்த்தக அமைப்பு மிகவும் மோசமாகச் செயல்படுகிறது. உலக வர்த்தக அமைப்புதான் சீனாவை , உலகின் பெரிய பொருளாதார சக்திவாய்ந்த நாடாக வளரவிட்டு வேடிக்கை பார்க்கிறது. சீனா தன்னை வளர்த்துக் கொள்வதற்காக ஆண்டுதோறும் அமெரிக்காவிடம் இருந்து 50 ஆயிரம் கோடி டாலரை மானியமாக எடுத்துக்கொள்கிறது. இந்த மானியத்தை நிறுத்தப் போகிறேன். இவ்வாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக வர்த்தக அமைப்பு, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்