இந்தியா முழுவதும் 24 புதிய மருத்துவக்கல்லூரிகள்!பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
இன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் 300 கோடி ரூபாய் செலவில் தொடங்கவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விரிவாக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 4 ஆண்டுகளில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.நவீன மருத்துவ வசதி பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் காசநோயை 2025ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.இந்தியா முழுவதும் 24 புதிய மருத்துவக்கல்லூரிகள் தொடங்க உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் 58 மருத்துவமனைகள் மருத்துவகல்லூரிகளாக தரம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.