” இந்தியா முழுவதும் மோடிக்கு 48 % வாக்கு ” எதற்கு என்று பாருங்கள்…!!
டெல்லி: தேசிய அளவிலான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவருக்கான கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி 48 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
ஐபிஏசி எனும் இந்திய அரசியல் நடவடிக்கை குழு தேசிய அளவில் அதிகம் ரீச் ஆகும் தலைவருக்கான ஆன்லைன் கருத்துக்கணிப்பை நடத்தியது,712 மாவட்டங்களில் 57 லட்சத்திற்கும் அதிமானோரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 55 நாட்களில் பிரதமர் மோடி மக்களிடையே அதிகம் ரீச் ஆகும் தலைவர் என்ற கருத்துக்கணிப்பில் முன்னணியில் உள்ளார்.
பிரதமர் மோடி 48 சதவீத வாக்குகளை அவர் பெற்றுள்ளார். அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் மூலம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இந்த கருத்துக்கணிப்பில் 923 அரசியல் தலைவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இதில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 11 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 9.3 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் 7 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
அவரை தொடர்ந்து மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி 4.2 சதவீத வாக்குகளுடன் 5வது இடத்திலும் பிஎஸ்பி கட்சித் தலைவர் மாயாவதி 3.1 சதவீத வாக்குகளுடன் 6வது பிடித்துள்ளார்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோருடன், கிஷோர் கடந்த காலத்தில் நெருக்கமாக பணிபுரிந்தார், சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, என்.சி.பி. தலைவர் சரத் பவார் மற்றும் பலரும் இந்த கருத்துக்கணிப்பில் இடம்பிடித்தனர்.இதேபோன்ற கருத்துக்கணிப்பை கிஷோர் 2013ஆம் ஆண்டும் நடத்தினார். அப்போதும் பிரதமர் மோடி முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது….
DINASUVADU