இந்தியா முதலிடம் …!இணைய சேவையை தடை செய்யும் நாடுகள் பட்டியல் வெளியீடு …!
இந்தியா பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி இணைய சேவையை தடை செய்யும் நாடுகள் பட்டியலில் முதலிடம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் திடுக் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் 2016 – 18 ஆம் ஆண்டுகளில் போராட்டம்,பதற்றமான சூழல் நிலவும் பகுதிகளில் என சுட்டிக்காட்டி 154 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது .
இதேபோல் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தானில் 19 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2012-17 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட 16 ஆயிரம் மணி நேரத்திற்கு மேல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் 2012-17 ஆம் ஆண்டுகளில் இணைய சேவை முடக்கப்பட்டதால் வருவாய் இழப்பு ஏற்பட்ட்டுள்ளது.
2012-17 ஆம் ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 60 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
2012 – 17 ஆம் ஆண்டுகளில் காஷ்மீருக்கு அடுத்தப்படியாக ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத்தில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.