Categories: இந்தியா

இந்தியா நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது!பிரதமர் நரேந்திர மோடி

Published by
Venu

பிரதமர் நரேந்திர மோடி , நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசியபோது தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள கின்டாவ் நகரில் 18வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு  தொடங்கியது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஈரான் அதிபர் ஹஸ்சன் ரவுகானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் முதன்முறையாக உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, குடிமக்களின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாகவும் கூறினார்.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உதாரணமாக ஆப்கானிஸ்தான் திகழ்வது துரதிருஷ்டவசமானது என்றும் மோடி கூறினார். அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஆப்கன் பிரதமர் கியானி துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். புவியியலின் வரையறையை மாற்றியமைக்கும் விதமாக டிஜிட்டல் இணைப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா, அண்டை நாடுகள் மற்றும் ஷாங்காய் அமைப்பு நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…

18 minutes ago

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

59 minutes ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

1 hour ago

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

2 hours ago

பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… எந்தெந்த ஊருக்கு எத்தனை பெருந்து இயக்கப்படுகிறது.?

சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…

2 hours ago

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?

டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…

3 hours ago