பிரதமர் நரேந்திரமோடி, கிராமங்கள் முன்னேற்றமடையும் போதுதான் இந்தியா வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளார்.
தேசிய பஞ்சாயத்து ராஜ்ஜிய தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டம் ராம்நகரில் ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளை தன்நிறைவு அடைய செய்வதுடன், நிதி ஆதாரத்திலும் வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மின்சார வசதி, தடுப்பூசி போடுதல் போன்றவற்றில் 100 சதவீதம் பங்களிப்பு அளித்த கிராமங்களின் ஊராட்சிமன்ற தலைவர்களையும் மோடி கவுரவித்தார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, பஞ்சாயத்து உறுப்பினர் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அனைத்து இந்திய கிராமங்களில் உயர்தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும், கிராமங்களில் வளர்ச்சியை மேம்படுத்தவும், அரசு உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்தார். எந்த திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், அதனை முழுமையாக பயன்படுத்துவதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…