இந்தியா கடற்படை 27 நாடுகளுடன் சேர்ந்து பிரம்மாண்ட போர் பயிற்சி!
அமெரிக்காவின் ஒரு மாநிலமாக மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவு செயல்பட்டு வருகிறது. இந்த தீவில் உள்ள பியர்ல் துறைமுகம் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 26 நாடுகள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கடற்படை போர் பயிற்சி இங்கு இன்று தொடங்க உள்ளது.
இதற்காக,நேற்று இந்திய கடற்படையில் உள்ள நவீன போர் கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி கேப்டன் சாந்தனு ஜா தலைமையில் பியர்ல் துறைமுகத்திற்கு சென்றடைந்தது. கடல் பாதுகாப்பில் உள்ள அம்சங்களை புரிந்து கொள்ள இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.