இந்தியா என்றாலே வெளிநாட்டினருக்கு குற்றங்களின் நாடாக கருதுகின்றனர்!
மும்பை உயர்நீதிமன்றம்,வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்தியாவை குற்றங்களின் நாடாக கருதுவதாக கவலை தெரிவித்துள்ளது.
மகாராஷ்ட்டிர மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் உறவினர்கள் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணையில் இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்துவா மற்றும் உன்னாவ் சம்பவங்களை குறிப்பிட்ட நீதிபதிகள், மதச்சார்பற்றவர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பற்ற நிலை இருப்பது போன்ற வெளித்தோற்றம் ஏற்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். இந்தியாவுடன் கல்வி மற்றும் கலாச்சார ரீதியிலான உறவுகளை ஏற்படுத்த உலகநாடுகள் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்த நீதிபதிகள், சில மனிதர்களின் செயல்பாடுகளால் ஒட்டுமொத்த நாட்டின் நன்மதிப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.