இந்தியாவுக்கு என்ன ஆச்சு..?
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து மண்ணில் சரமாரியாக தொடர் தோல்வியை தழுவியுள்ளது.
டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் கேப்டனான இருக்கும் விராட் கோலி பேட்டிங்கில் அபாரமாக ஆடி வந்தாலும், தலைமைப் பொறுப்பிலும் அவரது அணுகுமுறை சரி இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
காயமடைந்த அஷ்வினை ஆடவைத்துவிட்டு, நல்ல ஃபார்மில் இருந்த ஜடேஜாவை பெஞ்சில் அமர வைத்தது, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான லார்ட்ஸ் மைதானத்தில் தேவையே இல்லாமல் கூடுதல் பவுலராக குல்தீப் யாதவ் என இஷ்டத்துக்கு மாற்றங்கள் என்று அணியின் தேர்வு பலதரப்பினரையும் கேள்வி எழுப்ப வைத்துள்ளது.
என்னதான் ஆச்சு… ஏன் இவ்வளவு குளறுபடிகள் என பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வரும் நிலையில், அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பதவி விலக வேண்டுமென ரசிகர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.அது மட்டுமில்லாமல் தற்போது இந்திய அணி கேப்டன் என்ற முறையில் கோலியும் ரசிகர்களின் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
DINASUVADU