இந்தியாவில் முதன்முறையாக மும்பையில் அறிமுகமான வாட்டர் ஏடிஎம்-கள்…!
பணத்திற்கான ஏடிஎம்-களை பார்த்து விட்ட நிலையில், இப்போது தண்ணீருக்கான ஏடிஎம்-க்கள் வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மும்பையின் ரயில் நிலையங்களில்தான் முதன் முதலாக இந்த தண்ணீர் ஏடிஎம்-க்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒன்றல்ல இரண்டல்ல, 178 தண்ணீர் ஏடிஎம்-கள்.
மும்பையில் சத்ரபதி சிவாஜி மகராஜ் ரயில் நிலையம் துவங்கி மும்பை நகரிலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வாட்டர் ஏடிஎம்-களை மோடி அரசு அமைத்துள்ளது.
இந்த ஏடிஎம்-களில் 300 மி.லி. தண்ணீரை 1 ரூபாய், 500 மி.லி. தண்ணீரை 3 ரூபாய், 1 லிட்டர் 5 ரூபாய், பாட்டிலுடன் கூடிய 1 லிட்டர் தண்ணீரை 8 ரூபாய் என்ற விலைகளில் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம்.ஹைடெக், ஃபோன்டஸ் வாட்டர் மற்றும் ஜனஜால் ஆகிய கம்பெனிகள், இந்த வாட்டர் ஏடிஎம்-களை, ரயில்வேயிடம் ஏலத்தில் எடுத்து அமைத்துள்ளன. இதில் ஜனஜால் நிறுவனம் மட்டும் 99 ஏடிஎம்-களை வைத்துள்ளது.
கல்வி, குடிநீர், சுகாதாரம் போன்ற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கை வந்த பிறகு, அனைத்தும் வியாபாரமாக மாற்றப்பட்டு விட்டது. அதிலொன்றுதான் தண்ணீர் வணிகமாகும்.மன்மோகன் சிங் அவரது ஆட்சியில், ‘தேசிய நீர் கொள்கை’ என்ற பெயரில் துவங்கிய தண்ணீர் வணிகத்தை, மோடி வாட்டர் ஏடிஎம்- வரை கொண்டு வந்திருக்கிறார்.தற்போதைக்கு இந்த ஏடிஎம்-களில் தண்ணீர் விலை குறைத்து நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், மக்களை பழக்கப்படுத்திய பிறகு விலைகளை உயர்த்த வாட்டர் ஏடிஎம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.