இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,417 இறப்பு..! ஒரே நாளில் 3,68,147 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இந்தியா வெளியிட்டுள்ள திங்கள்கிழமை அறிக்கையின்படி 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதித்துள்ளது, மேலும் தொற்று காரணமாக 3,417 பேர் இறந்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,00,732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,29,3003 ஆக அதிகரித்துள்ளது. அந்த வகையில், தற்போது 34,13,642 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 2,18,959 ஆக உள்ளது. இதுவரை இந்தியாவில் கோவிட்-19 க்கு எதிராக 15,71,98,207 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 தொற்று எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது. பிறகு, செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தை கடந்தது, அக்டோபர் 11 அன்று 70 லட்சம் கடந்தது. அக்டோபர் 29 ஆம் தேதி 80 லட்சமும், நவம்பர் 20 ஆம் தேதி 90 லட்சமும், டிசம்பர் 19 ஆம் தேதி 1 கோடியும் என பரவலின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருந்தது. ஏப்ரல் 19 அன்று நாடு 1.50 கோடி பாதிப்பால் கடுமையான மைல்கல்லை கடந்தது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி அரசாங்கத்திடம் இந்தப் பெரும் தொற்றை சரி செய்ய மற்றும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேசிய தலைநகருக்கு ஒதுக்கப்பட்ட முழு ஆக்சிஜனையும் வழங்குவதற்கான நீதிமன்ற உத்தரவை நினைவுகூறக் கோரி ஒரு மையத்தின் மனுவுக்கு பதில் தாக்கல் செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.