இந்தியாவில் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

Default Image

இந்தியாவில் இருதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாரடைப்பினால் உயிரிழப்புகளும் ஆண்டு தோறும் உயர்ந்து வருகிறது. இதுகுறித்து இந்திய பொது சுகாதார அறக்கட்டளையும், ஹார்வர்டு பல்கலைக்கழக பொது சுகாதார கல்லூரியும் இணைந்து ஆய்வு மேற் கொண்டனர்.

2012 முதல் 2014-ம் ஆண்டு வரை 8 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. வசதி படைத்த இந்தியர்களில் பெரும்பாலானோர் இருதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ளது அதில் தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் நகர பகுதிகளில் வாழ்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 8 சதவீதம் பேர் மாரடைப்பினால் உயிரிழக்கிறார்கள்.

30 முதல் 74 வயது வரையிலானவர்கள் இத்தகைய மாரடைப்புக்கு ஆளாகின்றனர். இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. ஜார்க்கண்டில் 13.2 சதவீதம் பேரும், கேரளாவில் 19.5 சதவீதம் பேரும் பாதிக்கப்படுகின்றனர். மராட்டியம் மற்றும் டெல்லியில் மிக அதிகம் பேரை மாரடைப்பு நோய் தாக்குகிறது.

கிராமங்களில் அதிக அளவு சிகரெட் மற்றும் பீடி பிடிப்பது, மற்றும் உடல் நலத்தை சரிவர பராமரிப்பதில்லை. அதே நேரத்தில் நகர் புறங்களில் உடல்எடை பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய சுருக்கம் போன்றவற்றால் மாரடைப்பு ஏற்படுகின்றன.

சிகரெட் மற்றும் பீடி புகைப்பதால் பெண்களை விட ஆண்களே இருதய நோயினால் பாதிக்கப்படுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம் (46.4 சதவீதம்) மணிப்பூர் (60.3 சதவீதம்), மேகாலயா (59.7 சதவீதம்), மிசோரம் (71.7 சதவீதம்) மே.வங்காளம் (49.5 சதவீதம்) ஆகிய மாநிலங்களிலும் இருதய நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்