இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் உயர் பாதுகாப்பு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட் !
அனைத்து வாகனங்களுக்கும் அடுத்த ஆண்டிலிருந்து உயர் பாதுகாப்பு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட் பொருத்தப்பட உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இதுகுறித்த வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வாகனத்தின் இன்ஜின்கள், சேஸ் எண்களும், உயர் பாதுகாப்பு குறியீடும் இடம்பெற்றிருக்கும். இவற்றை பரிசோதித்தால், வாகனத்தின் உரிமையாளர், முகவரி, வாங்கப்பட்ட காலம் உள்ளிட்ட தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் திருடு போன வாகனங்களை எளிதில் கண்டறிய முடியும். அனைத்து வாகனங்களுக்கும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப நம்பர் பிளேட் பொருத்தப்படும். கார்கள் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு வழக்கம்போல முன்புற, பின்புற நம்பர் பிளேட்டுகளோடு, முன்பக்க கண்ணாடியின் உட்புறத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.