Categories: இந்தியா

இந்தியாவின் ஹிட்லர் அமித்ஷாவும் மோடியும் தான் சித்தராமையா காட்டம்..!

Published by
Dinasuvadu desk
கர்நாடக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு சட்டசபை அமைந்தது. பா.ஜனதா 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
பெரும்பான்மையில்லாத பா.ஜனதாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார், எடியூரப்பாவும் முதல்-மந்திரியாக பதவியேற்றார். இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு சென்றது. எடியூரப்பா நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ், ஜேடிஎஸ் தங்களுடைய எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை வாங்க முயற்சி செய்கிறது என இருகட்சிகள் தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், நாளை கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய வரலாற்றில் ஒரு மைல்கல்.
இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். கர்நாடகத்தில், பெரும்பான்மை இல்லாத பா.ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசியலமைப்பு சாசன விதி மீறப்பட்டு உள்ளதன் மூலம் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாக்கும் பொறுப்பு கவர்னருக்கு உள்ளது. இதனால், கவர்னர் எப்போதும் நடுநிலையாக செயல்பட வேண்டும்.
புதிய அரசு அமைப்பது தொடர்பாக கோவா, மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளை எடுத்து கூறி ஆட்சி அமைக்க அனுமதி அளிக்கும்படி கவர்னரிடம் கேட்டு கொண்டோம். எங்களின் கோரிக்கைகளை கவர்னர் காற்றில் பறக்க விட்டுவிட்டார்.
கவர்னர், பா.ஜனதா கட்சியுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார். அவர் உண்மை நிலையை மறந்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கிறார். நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் இந்தியாவில் ஹிட்லரின் வடிவங்களாக உள்ளனர். இவர்கள் 2 பேர் கூறும் அறிவுரைகளை கவர்னர் பின்பற்றுகிறார். அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றி இருந்தால் கவர்னர் பா.ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்து இருக்க மாட்டார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதாவுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கியதன் மூலம் குதிரை பேரத்துக்கு கவர்னர் வழிவகுத்து கொடுத்துள்ளார். தற்போது எங்களிடம் 117 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் ஆனந்த்சிங் எம்.எல்.ஏ.வை பா.ஜனதா மிரட்டி வைத்துள்ளது. அவரும் விரைவில் வந்து எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என கூறிஉள்ளார்.

Recent Posts

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…

45 minutes ago

Live : 2025-ன் முதல் ஜல்லிக்கட்டு முதல்… பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…

1 hour ago

சபரிமலையில் புதிய விமான நிலையம்! எத்தனை லட்சம் மரங்கள் வெட்டப்படுகிறது தெரியுமா?

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…

2 hours ago

விக்கிரவாண்டி பள்ளி குழந்தை உயிரிழப்பு! நள்ளிரவில் 3 பேர் கைது!

விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…

3 hours ago

சொல்லி அடிக்கும் ‘கேப்டன்’ பும்ரா! விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலியா!

சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…

3 hours ago

பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி… ரூ.3 லட்சம் அறிவித்தார் ஸ்டாலின்.!

சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…

13 hours ago