இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு பாலியல் வன்முறைகளே-உலக வங்கி..!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பான உலக வங்கியின் ஆய்வறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.
பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களால் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி பெண்கள் வேலையை உதறிவிட்டதாகவும், உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. மேலும், பெண் பிள்ளைகளை வீட்டில் தனியாக விட்டுச்செல்ல பயந்தும், பெண்கள் பலர் வேலையை கைவிடுவதாக உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்தால், வரும் 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது.