இந்தியாவின் டாப் 10 மருத்துவ கல்லூரிகள்;தமிழகத்தை சேர்ந்த 2 கல்லூரிகளுக்கு முக்கிய இடங்கள்.

Default Image

நாட்டின் சிறந்த தரவரிசையில் உள்ள கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

இந்தியாவின் சிறந்த மருத்துவ கல்லூரிகள்

NIRF இந்திய தரவரிசை 2022 இன் படி நாட்டின் சிறந்த  மருத்துவ கல்லூரியாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்-டெல்லி முதலிடத்தில் உள்ளது(aiims delhi).

அடுத்தபடியாக  சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  2இடத்திலும், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 3வது இடத்திலும் உள்ளது.

இதைத்தொடர்ந்து, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் & நியூரோ சயின்சஸ்-பெங்களூர்(4), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்-வாரணாசி(5), ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்-புதுச்சேரி(6), சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம்-லக்னோ(7), அமிர்த விஸ்வ வித்யாபீடம்-கோயம்புத்தூர்(8), ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்-திருவனந்தபுரம்(9) மற்றும் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி-மணிப்பால் 10 வது  இடத்தில் உள்ளன.

இந்தியாவின் சிறந்த பல் மருத்துவக் கல்லூரி

சவீந்தா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ், சென்னை

மணிப்பால் பல் மருத்துவக் கல்லூரி, மணிப்பால்

டாக்டர். டி.ஒய் பாட்டீல் வித்யாபீத், புனே

ஜாமியா ஹம்தார்ட், புது தில்லி ‘பார்மசி’ பிரிவில் முதலிடம் பிடித்தது. ஆராய்ச்சி பிரிவின் கீழ், பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சி முதலிடத்தை தொடர்ந்து ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி டெல்லி ஆகியவை உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்