இந்தியர்கள் ஏழ்மையை நோக்கி தள்ளப்படுகின்றனர்..!
மருத்துவ செலவுகளால் 5.5 கோடி இந்தியர்கள் ஏழ்மையை நோக்கி தள்ளப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆண்டுதோறும் மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகையால், 5.5 கோடி இந்தியர்கள் ஏழ்மையை நோக்கி தள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் மூன்று வல்லுநர்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களால் உண்டாகும் செலவு, சராசரி வருமானம் பெறும் இந்தியர்களின் வீட்டு செலவிற்கான தொகையை காலி செய்து விடுகிறது.
சுகாதார பொருளாதார வல்லுநர்கள் சக்திவேல் செல்வராஜ், ஹபிப் ஹசன் ஃபரூகியு ஆகியோர் உடல்நலத்தால் சார்ந்த சமூக நுகர்வு குறித்து ஆய்வு செய்தனர். அதன்படி, புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவை அதிகப்படியான செலவை ஏற்படுத்துகின்றன.